அசைக்கப்படுவதில்லை நான்
அசைக்கப்படுவதில்லை
கர்த்தரை என் முன்பாக
வைத்துவிட்டேன் - நான்
அசைக்கப்படுவதில்லை - 2
ஜீவனுள்ள தேவனைப் பற்றிக்கொண்டேன்
கறைதிரை ஒன்றும் நெருங்காது - 2
இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன்
சாத்தானின் சேனை என்னை அணுகாது - 2 - அசைக்கப்
தேவதூதர் சேனைகள் என்னோடு
செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார் - 2
பாதங்கள் கல்லின்மேலே இடறாமல்
கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார் - 2 - அசைக்கப்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் - 2
வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் - 2 –அசைக்க