ஆசீர்வதிக்கப்பட்டவரே

Artists : Bro.Sam Jebadurai
Album:
Categories:


ஆசீர்வதிக்கப்பட்டவரே                         

வாரும் வாரும் இப்பொழுதே                             

பிதாவின் ராஜ்யம் தந்திடுவார்                                  

மகிமை தேசம் சுதந்தரிப்போம்

 

புதிய ஆண்டை தந்திட்டவர்                                    

புதிய வாசல் திறந்திடுவார்                                

புதிய கிருபை தந்திட்டதால்                               

மகிழ்ந்து நடப்போம் இயேசுவுடன்

 

ஒளிரும் வருங்காலம் நமக்குண்டு                        

மகிமையின் மேகங்கள் முன்செல்லுதே                    

ஓசன்னா பாடி துதித்திடவே                                    

தூதரின் கூட்டம் நம்மோடு உண்டே

 

சிறியரில் ஒருவருக்கு செய்தவை எல்லாம்                     

பரமன் கிறிஸ்துவுக்கு செய்ததல்லவோ                         

உங்களுக்காக ஒரு ராஜ்யம்                                    

தந்து மகிழ்வார் இயேசுதாமே