அக்கினியின் காற்றை வீசச்

Artists :
Album:
Categories:


அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே                    

அபிஷேகத்தின் மழையை பொழியச் செய்யுமே            

ஊற்றுமே... ஆவியை... அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால்                  

தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே                     

தேவனே வாருமே... அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால்               

பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே                       

தெய்வமே... இறங்கும்... அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே                   

வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே                   

இன்றைக்கே, இப்போதே, அக்கினியை ஊற்றச் செய்யுமே.