அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே
பின்மாரியின் மழையை பொழியச் செய்யுமே
மூப்பர்கள் சொப்பனத்தைக் காணச் செய்யுமே
வாலிபர்கள் தரிசனத்தை நோக்கச் செய்யுமே
எங்கள் குமாரரை எழும்பச் செய்யுமே
தீர்க்கதரிசனங்களைச் சொல்லச் செய்யுமே
ஆவியின் வல்லமையை ஊற்றச் செய்யுமே
ஆவியின் கனிகளாலே நிறையச் செய்யுமே
காட்டுப் புறாக்கள் சத்தம் கேட்கச் செய்யுமே
தேசமெங்கும் எழுப்புதல் காணச் செய்யுமே
இந்தியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும்
கர்த்தாதி கர்த்தரைப் போற்றிப் பாடவும்
கல்வாரி இரத்தத்தால் மீட்கப்படவும்
இந்த வேளை இப்போதே சந்தித்தருளும்