அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே

Artists :
Album: Praise Songs
Categories:


அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே-- Anbe Anbe Anbe Aaruyir Urave
 
அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே
ஆனந்தம்! ஆனந்தமே!
 
1. ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா... ... ...
 
2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ... ... ...
 
3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே  எனையும்
அணைத்தீர் அன்பாலே... ... ...
 
4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா
 
5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ...ஆ... ஆ...