அந்தகார வல்லமைகளை
தேவபெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே
போராயுதம் தரிப்பேன்
போர் செய்வேன் (2)
சேனைகளின் கர்த்தர் நாமத்தில்
பெரும் மதில்களை தாண்டிடுவேன்
ஆகாயமண்டல லோகாதிபதிகள்
நடுங்கியே மறைந்திடுவார் - பயந்து
சர்ப்பங்களை மிதித்திடவும்
பெரும் தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை ஜெயம் எனக்கே
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
தூய ஆவியாலே கொடி ஏற்றுவேன்
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே– வஞ்சக.