ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2
தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா – 2
புத்தம் புதிதான உள்ளத்தோடு
உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா-2
உண்மையாய் உமக்காக உழைத்திடவே
உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2
ஏனோக்கு எலியாவை நடத்திச் சென்று
மரணத்தை காணாது எடுத்துக் கொண்டீர் - 2
நண்பனாய் உம்மோடு நடந்திடவே
வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா – 2
பரம எருசலேம் வாக்களித்தீர்
வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2
ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே
ஓயாத கிருபையை தந்திடும் ஐயா – 2
மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா - 2
நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே
பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா – 2