ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்

Artists :
Album:
Categories:


ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்                      

ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்                    

இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்                     

சர்வ வல்ல தேவனே ஸ்தோத்திரம் (2)

 

முற்பிதாக்களை நீர் நடத்திச் சென்றீரே               

எங்களையும்கூட நீர் நடத்திச் செல்லுமே                       

எங்கள் ஓட்டம் வெற்றியோடு ஓடி முடிக்கவே                  

கிருபை தாருமே உந்தன் அருளை தாருமே

 

மகிமை மகிமை ஓ தேவனை                             

மகிமை மகிமை இயேசு ராஜனை

 

பொன் முகத்தின் சாயலை கண்டு களிக்கவே        

ஏங்குகின்றேன் உம் சமுகம் தாருமே                           

நேசர் மார்பினில் உம் பேரழகினை                             

ரசித்து ருசித்து மகிழ்வேன் நித்தியம் நித்தியமாய்

 

விண்ணின் தூதரோடு நான் மகிழ்ந்திருக்கவே              

மண்ணில் வந்த நீர் ஜீவன் தந்திட்டீரல்லலோ                   

ஜீவ புத்தகத்தில் என் பேர் எழுதியே                       

பரலோக பாக்கியம் தந்திட்டீரையா.