Artists :
Album:
Categories:
அபிஷேக நாதரே அக்கினி நேசரே -- Abhishega Nathare Agni Nesare
அபிஷேக நாதரே அக்கினி நேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே
ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே
ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்பவரே
சுவிசேஷகனாக தீர்க்கதரிசியாக
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே
தாவீதின் குமாரனாய் இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும்
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே
உன்னத பெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே
அபிஷேகித்திடுமே.... அபிஷேகித்திடுமே.