அபிஷேகம் ஈயுமே

Artists :
Album:
Categories:


அபிஷேகம் ஈயுமே அபிஷேகம் தாருமே                   

அபிஷேகம் தேவையே அபிஷேகம் ஊற்றுமே

 

அக்கினியாலே அபிஷேகம்                          

ஆவியினாலே அபிஷேகம்                           

வல்லமையான அபிஷேகம்

 

உன்னதமான அபிஷேகம் எங்கும் எனக்கு வேண்டுமே     

அக்கினியாக மாறிட அன்பரே இப்போ வேண்டுமே

    

சர்ப்பங்களை மிதித்திட தேள்களையும் நசுக்கிட                 

சத்துரு கிரியை அழித்திட சத்துவத்தால் நிரப்பிடும்

    

வெற்றி வாழ்க்கை வாழவும் ஆத்துமாக்கள் சேர்க்கவும்

வரங்களெல்லாம் செயல்பட வானங்களை திறந்திடும்