அபிஷேகிக்கும் எந்தன் இயேசு - என்
ஆறுதல் தேறுதல் இயேசு (2)
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே (2)
அதிசயமானவர் இயேசு
ஆலோசனை கர்த்தரும் அவரே (2)
நம்மேலவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் (2)
மேய்ப்பரும் மீட்பரும் இயேசு
உன் உள்ளத்தின் ஆனந்தம் அவரே (2)
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் (2)
உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே (2)
நித்தியமாய் நடத்திடுவார்
நிதம் அவரைத் துதித்திடுவோம் (2)