அறிந்தவரும் என்னை புரிந்தவரும்
ஆன்மாவை மீட்பவரும்
ஜெபத்தையெல்லாம் கேட்பவரும்
கண்ணீர் யாவும் துடைப்பவரும்
இயேசு என்னும் இரட்சகராம்
இம்மானுவேலாய் கூட நிற்பவர்
ஆபத்திலே அனுகூலமாய்
ஆற்றித் தேற்றி ஆதரிப்பாரே
தேற்றரவாளன் தேற்றுவாரே
துக்கத்தையெல்லாம் மாற்றுவாரே
வல்லமையால் நிரப்பிடுவார்
வரங்களையே பொழிந்திடுவார்
பாசம் வைத்தவர் நேசம் வைத்தவர்
பாவி என்மேல் கிருபை வைத்தவர்
மாறிடாத மா நேசராய்
மனக்குறைகள் தீர்த்திடுவாரே
கவலை கண்ணீர் துயரமெல்லாம்
கல்வாரி குருசில் சுமந்தனரே
பாரம் ஏனோ வருத்தம் ஏனோ
வந்திடுவாய் இயேசுவண்டையில்