அருள் ஏராளமாய் பெய்யும்

Artists :
Album:
Categories:


அருள் ஏராளமாய் பெய்யும் / Arul Eralamai Peiyum 
 
1. அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே                                                                             
 
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே
 
2. அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்
 
3. அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்
 
4. அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே