அறுவடைக்காலம் அவசரமே
அறுவடை செய்ய விரைந்திடுவீர் - 2
விளைந்த வயல் வெளிகள்
வருந்தி அழைக்கின்றதே - 2 – அறுவடை
நெருக்கி ஏவிடுதே
கல்வாரி தூய அன்பே - 2
நொறுக்கப்பட்டார், பிழியப்பட்டார்
எடுத்துரைப்பாயா தேவ அன்பை - 2 - அறுவடை
காலங்களோ கடைசி
நாட்களோ இல்லையே - 2
அழிவினின்று தப்பும் வழி
அறிவிப்பார்கள் யாருமுண்டோ - 2 - அறுவடை
பாதாள ஜுவாலையிலே
புழுவாய் துடிக்கின்றாரே - 2
உடன் பிறந்தோர் ஐவருண்டே
தடுத்திடுவோர் இங்கே யாருமுண்டோ - 2 - அறுவடை
மேய்ப்பனில்லா ஆடுகள்
திகைத்து திரிகின்றதே - 2
வழி சத்தியம் ஜீவனான
கிறிஸ்துவை சொல்ல யாருமுண்டோ - 2 – அறுவடை