அடைக்கலமே  உமதடிமை நானே

Artists :
Album: Praise Songs
Categories:


அடைக்கலமே  உமதடிமை நானே - Adaikalame umadhadimai naane

அடைக்கலமே  உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே  அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
 
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே  மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே -
 
2. கர்த்தரே  உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே  உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே  -
 
3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே  நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே -
 
4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே -
 
5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே  - உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே