அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

Artists : Fr. Berchmans
Album: Praise Songs
Categories:


   அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

    திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

    என் தேவனுக்குள் களி கூருவேன்

 

1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்

    வயல்களிலே தானியமின்றிப் போனாலும் -  அத்திமரம்

 

2. மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்

    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் - அத்திமரம்

 

3. எல்லாமே எதிராக இருந்தாலும்

    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் - அத்திமரம்

 

4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்

           ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும  - அத்திமரம்