ஆவியில் அனல் கொண்டு ஆனந்திக்க
ஆத்தும நேசரே வந்திடுமே
நேசத்தை என்மீது பொழிந்திடவே
பின்மாரி மழையினை ஊற்றிடுமே
நிரப்பட்டும் நிரப்பட்டும் தூய ஆவியே
பரவட்டும் பரவட்டும் தேவ நதியே
இயேசுவின் நேசத்தால் நிரப்பப்பட
கல்வாரி தரிசனம் தந்திடுமே
மண்பாண்ட பொக்கிஷம் நிறைந்திடவே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
ஊற்றட்டும் ஊற்றட்டும் பின்மாரியை
தேசமெல்லாம் கரைபுரண்டோடட்டுமே
தாவீதைப் போல் ஆடிப்பாடி துள்ளிடவே
தெய்வீக அக்கினி ஊற்றிடுமே
தீப்பிடித்து தேசமெங்கும் பரவிடவே
பரலோக வல்லமை ஊற்றிடுமே
பாயட்டும் பாயட்டும் வாய்க்காளெல்லாம்
கர்த்தரே தேவன் என்று அறியட்டுமே.