சந்தோஷம் ஆஹா சந்தோஷமே
பரலோகத்தின் மகா சந்தோஷமே
சந்தோஷம் நிரப்பிடுதே - என்
உள்ளத்தை நிரப்பிடுதே
புசிப்பும் குடிப்புமல்ல பரலோக ராஜ்யம்
பரிசுத்த ஆவியின் சந்தோஷமே
பொன்னல்ல வெள்ளியல்ல எங்களின் நாட்டம்
இயேசு கிறிஸ்துவின் சந்தோஷமே
சினிமா களியாட்டம் வேண்டாமே எமக்கு
நேசரின் பிரசன்னம் சந்தோஷமே
உள்ளத்தின் ஆழங்கள் எல்லாமே நிரப்பும்
தெய்வீக சமூகத்தின் சந்தோஷமே
உலகத்தின் முடிவும் எம்மோடு இருப்பார்
ஒருபோதும் ஒருநாளும் விலகிடாரே
ஆற்றியே தேற்றிடும் அன்பரின் அன்பு
ஆனந்தக் கூத்தாடச் செய்திடுதே.