சிநேகமுள்ளவன் சிநேகிக்கட்டும்
பாசமுள்ளவன் பகிர்ந்து கொள்ளட்டும்
நேசமுள்ளவன் கிறிஸ்துவை நேசிக்கட்டும்
தாகமுள்ளவன் ஜீவத் தண்ணீர் பருகட்டும்
வா வந்து விடு இயேசுவண்டை
தா தந்து விடு நேசருக்கே
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்
கேட்கிறவன் சொல்லட்டும் வா என்றே
ஜீவ அப்பம் அவரே, ஜீவ தண்ணீரும் அவரே
புசித்து குடித்து நீயும் மகிழ்ந்திடுவாயே
எக்காலமும் சிநேகிப்பவன் சிநேகிதனல்லோ
உடன் பிறப்பின் அன்பினிலும் மேலானதது அல்லோ?
இயேசுவண்டை வருவாய்..
அன்பை அள்ளிப்பகிர்வாய்
நித்திய நித்தியமாக களித்திருப்பாயே...
சிநேகித்த லாசருவை உயிர்ப்பித்தாரே
உன்னையும் உயிர்ப்பிப்பார், தம் ஆவியினாலே...
சாவுக்கேதுவான ஆன்மா சரீரத்தை
உயிர்ப்பித்து உயர்த்திடுவார் இன்றை தினமே