சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள்

Artists :
Album:
Categories: Jesus


சிங்கார மாளிகையில்

ஜெயகீதங்கள் பாடிடுவோம்

சீயோன் மணவாளனுடன்

 

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து

ஆறுதலடைந்திடுவோம்- அங்கே

அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி

அன்பரில் மகிழ்ந்திடுவோம்

 

2. துயரப்பட்டவர் துதித்துப் பாடுவார்

துதியின் உடையுடனே அங்கே

உயரமாம் சீயோன் உன்னதரோடு

களித்து கவி பாடு வோம்

 

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேவின்

திருமுகம் கண்டிடுவோம்- அங்கே

முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி

தரித்தோராய் துதித்திடுவார்

 

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி

புன்னகை பூத்திடுவோம் புது

எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்

மண்ணாசை ஒழித்திடுவோம்

 

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்

தவறாமல் நடக்கிறதே - அவர்

வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்

ஆயத்தமாயிருப்போம்