Artists :
Fr. Berchmans
Album:
Categories:
எஜமானனே என் இயேசு ராஜனே/ Ejamaananae en yaesu raajanae
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் - நான்
பலியாகி எனை மீட்டீரே - நீர் - 2
பரலோகம் திறந்தீரையா - 2
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஒடி உழைத்திடுவேன் - நான்
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை - 2
அதை நான் மறப்பேனோனா - 2
3. அப்பா உன் சந்நிதியில் தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் - இயேசு
எப்போது உம்மைக் காண்பேன் - நான் - 2
ஏங்குதய்யா என் இதயம் - 2
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும்
வறுமையெல்லாம் மாறணும் - தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும் - 2