எக்காள சத்தத்தால் வீறுகொண்டு நீ எழும்பு
இக்கால எலியாவே கர்த்தருக்காய் எழும்பு
சீயோனே உன் வல்லமையை தரித்தெழும்பு
கோலியாத்தை வீழ்த்திடவும்
தேவஜனம் மகிழ்ந்திடவும்
கர்த்தருக்காய் நீ எழும்பு
ஜீவனுள்ள தேவனுண்டு
கல்லுமுண்டு, கவணுமுண்டு
வைராக்கியமாய் நீ எழும்பு – எக்காள
கிதியோனே எழும்புவாயா
அடிமைத்தனம் முறித்திடவே
உனக்குள்ள பெலன் போதுமே
எதிர்த்து நிற்கக் கூடாத
வாக்கினையும் வல்லமையும்
பெற்றிடவே நீ எழும்பு - எக்காள
தெபோராக்கள் எழும்ப வேண்டும்
எஸ்தர்கள் ஜெபிக்க வேண்டும்
தேசத்துக்காய் நீ எழும்பு
எரிகோக்கள் தகர்க்க வேண்டும்
பாகால்கள் அழியவேண்டும் – எக்காள
வெற்றி வாகை சூடிட எழும்பு
சர்ப்பங்களை மிதித்திடவும், சாபங்களை முறித்திடவும்
அதிகாரத்தோடே எழும்பு
ஜெயத்தின்மேலே ஜெயம் பெற்று
சீயோனை சுதந்தரிக்க
தீர்மானமாய் எழும்பு