எல்லைகளைப் பெரிதாக்கும் விரிவாக்குமே
எல்லையில்லா கிருபைகளைப் பொழிந்தருளுமே
எல்லைகளை ஜெபத்தின் எல்லைகளை
வரத்தின் எல்லைகளை ஊழிய எல்லைகளை
தொல்லை தரும் சத்துருவின் தலையை மிதித்து
சொல்லி வரும் சுவிசேஷம் எங்கும் கேட்கவே – எல்லைகளை
வெற்றிகொடி ஏந்தி இந்த தேசமெங்கிலும்
வல்ல இயேசு நாதர் நாமம் மகிழ்ந்து போற்றவே - எல்லைகளை
ஐந்து கண்ட மக்களையும் சிலுவை அன்பிடம்
கூட்டிச் சேர்க்க உன்னதத்தின் பெலன் தாருமே - எல்லைகளை