எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்

Artists :
Album:
Categories:


எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே         

எல்லோருக்கும் அன்பு செய்யும் நேசரே              

நல்லோரையும் பொல்லாரையும்                     

இல்லோரையும் உள்ளோரையும்                     

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே

 

தம்மண்டை வந்தோரை தள்ளாரே                              

தம் அன்பாலே நம்மை தேடி வந்தாரே               

தாமாக ஜீவத்தண்ணீர் தந்தாரே                                 

நம் தாகத்தையே தீர்ப்பேன் என்று சொன்னாரே

    

பாவ பாரம் சுமப்பவரே வாருங்க                          

நீங்க வருத்தப்பட்டு பயன் என்ன கூறுங்க                      

பாவ சாபம் நான் சுமப்பேன் என்றுங்க                          

உங்க பாரம் நீக்கி வாழ்வளிப்பார் இன்றுங்க

    

கண்ணீர் கவலை ஒன்றும் வேண்டாமே                        

அந்த காட்டு பறவைகளை பாருமே                        

உடுத்துவித்து உணவளிப்பார் என்றுமே                    

அதினால் வந்திடுங்க இயேசுகிட்ட இன்றுங்க.