எழும்பி நீ பிரகாசி
உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமையோ
உன்மீது உதித்தது (எழும்பி நீ பிரகாசி...)
இருள் பூமியை மூடும் காரிருள் ஜனங்களை மூடும்... - 2
ஆனாலம் உன்மீது கர்த்தர் உதித்திடுவார்... - 2
அவா; மகிமை உன்மீது காணப்படும் (எழும்பி நீ பிரகாசி...)
வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும்
உன் ஒளியின் இடத்துக்கு இராஜாக்களும்... - 2
நடந்தே வருவார்கள் உன் கன்களை ஏறெடுத்துபார்... - 2
ஏகமாய் கூடியே உன்னிடம் வருவார்கள் (எழும்பி நீ பிரகாசி...)
உன்மீது இருக்கும் என் ஆவியும்
உன் வாயில் அருளும் என் வார்த்தைகளும்... - 2
இன்று முதல் உன் வாயில் இருக்கும்
உன் சந்ததிமீது இருக்கும்... - 2
இதுவே நான் செய்யும் உடன்படிக்கை
என்றே கர்த்தர் சொல்லுகிறாh; (எழும்பி நீ பிரகாசி...)