எழுந்தருளும் என் தேவா

Artists :
Album: Praise Songs
Categories:


எழுந்தருளும் என் தேவா -- Ezhuntharulum en Theva
 
எழுந்தருளும் என் தேவா
எழுந்தருளும் எனக்காக
எழுந்தருளும் என் இரட்சகா
இப்புத்தாண்டிலே
 
1. நீரல்லால் எனக்கு யாருமில்லையே
யுத்தம் செய்ய எனக்காக - 2
சத்துருக்கள் சிதறுண்டோட
எழுந்தருளும் என் இயேசுவே - 2
 
2. சிங்கக் கெபியில் தானியேல்போல
நிற்கின்றேனே எழுந்தருளம்
சிங்கங்கள் தாக்கிடாமல்
வாய்களை கட்டிட எழுந்தருளம்
 
3. தேவ சமுகம் முன் செல்ல
அக்கினி ஸ்தம்பமாய் எழுந்தருளும்
கானானின் சுதந்திரத்தை
பெற்றிடவே எழுந்தருளும்
 
4. இஸ்ரவேலின் கெம்பீரமே நீர்
வெற்றி தந்திட எழுந்தருளும்
உயிர்த்தெழுந்த வல்லமையோடே
எழுந்தருளும்... எழுந்தருளும்...