எழுந்தருளும் என் தேவா,
எழுந்தருளும் எனக்காக
எழுந்தருளும் என் இரட்சகா
இந்த வேளையிலே
நீரல்லால் எனக்கு யாருமில்லையே
யுத்தம் செய்ய எழுந்தருளும்
சத்துருக்கள் சிதறுண்டோட
எழுந்தருளும் என் இயேசுவே -2
சிங்கக் கெபியில் தானியேல்போல
நிற்கின்றேனே எழுந்தருளும்
சிங்கங்கள் தாக்கிடாமல்
வாய்களை கட்டிட எழுந்தருளும்
தேவ சமுகம் முன் செல்ல
அக்கினி ஸ்தம்பமாய் எழுந்தருளும்
கானானின் சுதந்திரத்தை
பெற்றிடடே எழுந்தருளும்
இஸ்ரவேலின் கெம்பீரமே நீர்
வெற்றி தந்திட எழுந்தருளும்
உயிர்த்தெழுந்த வல்லமையோடே
எழுந்தருளும்... எழுந்தருளும்...