எந்தன் கன்மலையானவரே

Artists :
Album:
Categories: Jesus


எந்தன் கன்மலையானவரே
Enthan Kanmalaiyaanavarae
 
 
எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்குப் பாத்திரே
ஆராதனை உமக்கே (4)
 
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே
 
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு  ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே
 
3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்