ஏந்திட்டார் தாங்கிட்டார் சுமந்திட்டார்
இன்னும் இனிமேலும் நடத்துவார்
தாயினும் மேலான அன்போடு
கிறிஸ்துவே என்றும் என்னை நடத்துவார்
விரைவாக விரைவாக வாரும் ஐயா
நிறைவாக உம்மண்டை சேரும் ஐயா
கூடஉண்டு என் அருகில் உண்டு
உயிர்த்தெழுந்த இயேசப்பா எனக்குள் உண்டு
தகப்பனாய் நண்பனாய் நீங்காத நேசராய்
உலகத்தின் முடிவுவரை நடத்திடுவார்
கூடவரும் என் கன்மலையே
பசிதாகம் இனி என்றும் எனக்கில்லையே
இருந்தவர் இருப்பவர் வருகின்ற ராஜாவாய்
மகிமையின் தேசமதில் சேர்த்திடுவார்
வாக்கு மாறா வல்லவரே
வலக்கரத்தால் என்னை தாங்கிடுவார்
இயேசுவாய் நேசராய் இம்மானுவேலராய்
கரம் பிடித்து என்னை நடத்திடுவார்