இன்ப துன்ப நேரத்திலும்
அப்பா என்னை நடத்தும்
நேசர் மார்பினில் சாய்ந்துமே
வாழவே பெலன் தாருமே
போதும் உந்தன் நேசம் ஏழைக்கு
போதும் உந்தன் அன்பு மட்டுமே
நேசத்தாலே சோகமாயினேன்
பாசத்தாலே பாடி போற்றுவேன்
கொல்கொதாவின் தியாக அன்புக்கு
ஈடு இணை எங்கு உண்டு
ஆ! அந்த அன்பின் மேன்மையை
நன்றியுடன் போற்ற பாடுவேன்
நேசர் உமக்காய் வாழுவேன்
என்றும் சாட்சியாக ஜீவிப்பேன்
வெற்றியுடன் ஓட்டம் முடித்து
அப்பாவின் பாதம் சேருவேன்
பாடல்-74
இராஜாதி இராஜாவுக்கு ஸ்தோத்திரம்
ராஜாதி ராஜாவுக்கு ஸ்தோத்திரம்
தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாதி கர்த்தாவுக்கு ஸ்தோத்திரம்
என்றென்றும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
வானம் பூமி யாவற்றையும் படைத்தவரே ஸ்தோத்திரம்
ஜீவன் பெலன் சுகமும் தந்து காப்பவரே ஸ்தோத்திரம்
ஆவி ஆத்மா சரீரத்தையும் மீட்டவரே ஸ்தோத்திரம்
கறை திரைகள் நீக்கி காக்கும் தூயவரே ஸ்தோத்திரம்
மீண்டும் உலகில் வருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
விரைவில் உம்மை காண்பதினால் கோடி கோடி ஸ்தோத்திரம்