இந்த மட்டும் காத்த எபெனேசரே

Artists :
Album: Praise Songs
Categories:


இந்த மட்டும் காத்த எபெனேசரே--Intha Mattum Katha
 
 
1.  இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
 
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை - அல்லேலூயா!
 
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர்             - (2)
 
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே - மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே    - (2)
 
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே  - (2)