இந்த தலைமுறை

Artists :
Album:
Categories:


இந்த தலைமுறை இந்தியர்களை                    

இயேசுபாதம் விரைந்து சேர்த்திட               

எழும்பிடும் வீரர்களே                                

அறுவடை மிகுதி வருகையோ சமீபம்                     

விரைந்து உழைத்திட எழும்பிடுவீர்

    

திக்கெட்டும் செல்வோர் ஆத்துமாக்களை சேர்ப்போம்       

பரலோகில் பலனும் மிகுதியாமே

    

ஊக்கமாய் ஜெபித்து கண்ணீரோடு விதைப்போம்           

கெம்பீரமாய் சேர்க்கும் நாள் இதுவே

    

உன்னதத்தின் அன்பால் உள்ளத்தை நிறைப்போம்          

கிறிஸ்துவின் வருகை சமீபமாமே.