இதோ மனுஷரின் மத்தியில்

Artists :
Album:
Categories:


இதோ மனுஷரின் மத்தியில்/ Idho manusharin mathiyil
 
இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே  வாசம் செய்கிறாரே
 
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
 தம் ஜனத்தாரின் மத்தியிலாம் - தேவன்
தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
 
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே - ஜீவனாலே
தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
 
3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே - என்றும்
துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
 
4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மெய்  சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே
 
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்