இதுவரை செய்த செயல்களுக்காக

Artists :
Album: Praise Songs
Categories:


இதுவரை செய்த செயல்களுக்காக - Idhuvarai Seidha
 
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2)    
 
1. உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்வின்றி வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி(2)          - இதுவரை
 
2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)      - இதுவரை
 
3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய்  என்னையே  ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)          - இதுவரை