இயேசு எந்தன் தெய்வம்

Artists :
Album:
Categories:


இயேசு எந்தன் தெய்வம் என்னை நேசித்தார்                    

தேடி வந்து காத்து மீட்டு இரட்சித்தார்                     

உன்னதத்தின் அன்பால் உள்ளம் நிறைந்தார்          

அல்லேலூயா (4)

 

இயேசு என் தகப்பன் என்னை நேசித்தார்                   

தோளின் மேல் சுமந்து பாசம் காண்பித்தார்                     

யுத்தம் செய்து வென்று ஜெயம் தந்திட்டார்           

அல்லேலூயா (4)

 

இயேசு எந்தன் நண்பன் என்னை நேசித்தார்     

வாக்குத்தத்தம் தந்து ஆற்றித் தேற்றினார்                  

இன்முகத்தை காட்டி கண்ணீர் துடைத்தார்            

அல்லேலூயா (4)

    

இயேசு ஆத்தும நேசர் என்னை நேசித்தார்                 

ஆவியால் நிறைத்து அன்பை ஊற்றினார்                       

தேவ சாயலாக என்னை மாற்றினார்                 

அல்லேலூயா (4)