இயேசுவே இரட்சகரே நேசரே

Artists :
Album:
Categories:


இயேசுவே இரட்சகரே நேசரே என் பிதாவே

வாரும் இவ்வேளையிலே வந்தென்னை              

ஆசீர்வதித்தருளும் என் இயேசுவே                   

ஆசீர்வதித்தருளும்

 

கல்வாரி மேட்டினில் கோரச் சிலுவை மீதே               

தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக                   

என்னதான் பதில் செய்குவேன் என் இயேசுவே             

என்னதான் பதில் செய்குவேன்

 

உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே           

உயிர்ப்பியும் உள்ளமதையே உம் ஆவியால்               

தேற்றியே ஆற்றிடுமே என் இயேசுவே                          

தேற்றியே ஆற்றிடுமே

    

வாடிய பயிருக்கு வான் மழை வானவனே                      

நாடியே தேடுகிறேன் உன் பாதத்தை                       

நன்மையால் நிரப்பிடுமே என் இயேசுவே                  

நன்மையால் நிரப்பிடுமே

 

நருங்குண்ட நொறுங்குண்ட இதயத்தை ஒருபோதும்       

தள்ளிடா தயாபரனே இவ் ஏழையை                       

ஏற்றுமே இரக்கஞ் செய்யும் என் இயேசுவே                

ஏற்றுமே இரக்கம் செய்யும்.