இயேசுவின் சமூகம் ஆனந்தமே

Artists :
Album:
Categories:


இயேசுவின் சமூகம் ஆனந்தமே                           

நேசரின் பிரசன்னம் ஆச்சரியமே

 

துக்கங்கள் மாறிடுமே                                

நீ கூப்பிடும் வேளையிலே                           

கண்ணீர் மறைந்திடுமே                                   

கர்த்தர் கரமதை நீட்டுவாரே                               

அற்புதங்கள் நடந்திடும் அதிசயங்கள் நடந்திடும்            

இயேசுவை விசுவாசித்தால்

 

கொந்தளிக்கும் கடலோ                                   

வீசும் புயல் காற்றோ                                     

இரையாதே அமைதலாயிரு                               

என்றவர் அமர்த்துவாரே                                   

கடலலை அமர்ந்திடும் புயலகோரம் நின்றிடும்             

இயேசுவை விசுவாசித்தால்

 

மாராவின் கசப்பெல்லாம்                                 

மதுரமாய் மாறிவிடும்                                     

தோல்வியின் புலம்பலெல்லாம்                           

வெற்றி முழக்கமாய் மாற்றுவாரே                   

பாவத்தின்மேல் ஜெயித்தாரே சாபத்தின் கூர் ஒடித்தாரே    

இயேசுவை விசுவாசிப்பாய்

    

கர்த்தரின் கருணையிலே                                 

அளவேதும் இல்லையே                                   

கல்வாரி அன்பினாலே                                    

உள்ளமது உருகிடுதே                                     

இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்  

இயேசுவை விசுவாசிப்பாய்