ஜீவ அப்பமே ஜீவாதிபதியே

Artists : Bro.Sam Jebadurai
Album:
Categories:


ஜீவ அப்பமே, ஜீவாதிபதியே                               

ஜீவனின் பெலனே - 2                                          

ருசிப்போம், புசிப்போம் மகிழ்வோம்                             

நீர் நல்லவர், வல்லவரே – 2

 

மன்னாதி மன்னவனே,                                    

பரலோக மன்னாவே - 2                                  

மனதின் மகிழ்ச்சியே எந்தன்                              

வாழ்வின் புகழ்ச்சியே - 2

 

அன்பது இனிமை, பாசமே புதுமை                         

பெருகுதே பேரின்பமே, பேதையர்க்கு என்றுமே - 2         

பேருலகில் யாவுமே, வீணாக தோன்றிடுதே     

பரலோகத்தின் பேரின்பத்தை,ருசிப்பேனே என்றென்றுமே-2

 

தூதரின் உணவை (உம்) ஜனத்துக்கு கொடுத்தீர்            

கன்மலை நீரூற்றினால், தாகத்தைத் தீர்த்து விட்டீர் - 2     

காடைகளைக் குவித்தீர், ஏராளமாய்க் கொடுத்தீர்      

பாதையெல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே – 2

 

ஜீவனை ஊற்றினீர், இரத்தத்தை சிந்தினீர்                  

எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றரக் கலந்துவிட்டீர் – 2

ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர்                 

வாக்கடங்கா பெருமூச்சோடு பரிந்து பேசுகின்றீர் - 2

 

சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள் தீருமே                         

ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் - 2         

ஜீவனில் பெருகியே, பூரணடைந்திடுவேன்                      

பொன் முகத்தின் செயலினால், மறுரூபமடைவேனே – 2