ஜீவ நதி வருகின்றது

Artists :
Album:
Categories:


ஜீவ நதி வருகின்றது என்னை நோக்கி                    

ஜீவ நதி வருகின்றது                                

பரலோகத்தின் சிங்காசனத்தினின்று                             

ஜீவ நதி வருகின்றது

 

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4

    

ஜீவாதிபதி அவரே எந்தனுக்காய்                           

ஜீவனை தந்தவரே                                        

ஜீவன் பெற்றிட ஜீவனில் வளர்ந்திட                            

ஆத்ம நேசர் அருள் செய்தாரே

 

ஜீவ கனி மரங்கள் உண்டே நதியோரம்                         

ஜீவ கனி மதுரமாமே                                     

ஜீவ ஊற்றிலே தாகம் தீர்ந்து மகிழ்ந்திட                        

ஜீவ பாதை திறந்திட்டாரே

    

ஜீவ புத்தகமதிலே என் பெயரையும்                       

கிருபையாய் எழுதினாரே                                 

ஆணி பாய்ந்திட்ட கரங்களில் கண்ணீரை                  

ஆனந்தமாய் ஊற்றிடுவேனே