ஜோதிமயமானவராய் கூட

Artists :
Album:
Categories:


ஜோதிமயமானவராய் கூட வருவார்                       

தடை யாவும் நீக்கி புது வழி திறப்பார்                     

பாதையில் சோர்ந்திடாமலே பெலன் தருவார்              

ஜெயத்தோடு நிறைவேற்றுவார்

 

துள்ளி மகிழ்ந்திடு தேவபிள்ளையே நீ                           

அள்ளி அணைப்பார் ஆற்றியே தேற்றிடுவார்

 

துக்கத்தோடு நீ சென்றிட்டாலும்                           

மகிழ்ச்சி ஊற்று அங்குண்டு                                    

மாராவின் கசப்பை மாற்றிடுவார்                          

அதிசயம் செய்வார்

 

பசியினால் நீ வாடும்போது                               

பரம மன்னா ஈந்திடுவார்                                  

பாதம் கல்லில் இடறாமல்                                

ஏந்தி சுமந்திடுவார்.