Artists :
Album:
Praise Songs
Categories:
கல்வாரி சிநேகம் -- Kalvaari Snegham
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும் – 2
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் - 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் - 2
கும்பிடுவோரை குணமாக்கும் தேகம் -கல்வாரி
2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண - 2
ராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் - 2
என்னைக் காணுவோர் உம்மைக் காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா - 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் - 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்