கைதட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


கைதட்டிப் பாடி--Kai Thatti Paadi Magizhnthiruppom
 
கைதட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில் களிகூருவோம்
 
களிகூருவோம் களிகூருவோம்
கர்த்தர் சொன்ன
வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
 
களிகூருவோம் களிகூருவோம்
கவலைகள் மறந்து களிகூருவோம்
 
1. நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்
அதிகமாய்  செய்திடுவார்
 
2. பயப்படாதே, உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்
 
3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
 
4. அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்
 
5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே
 
6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்