கண்ணில் அருவியாய்

Artists :
Album:
Categories:


கண்ணில் அருவியாய் கண்ணீர் ஓட                      

கல்வாரி நோக்குகிறேன்                                  

உள்ளம் உருகி செந்நீர் பாய                               

கொல்கதா காண்கின்றேன்

 

சாபங்கள் யாவையும் சுமந்து தீர்க்க                       

முள்முடி சூட்டி உம்மை ஈந்தீர்                            

எந்தனின் பாவங்கள் ஆணிகளாய்                         

உந்தனின் பொற்கரம் துளைத்திட்டதோ

 

ஈட்டியால் விலாவினை குத்திடவும்                       

தண்ணீரும் இரத்தம் பாய்ந்ததுவோ                             

தேவ சாயலாக என்னை மாற்ற                                

தேவா உம் ஜீவனை ஊற்றீனீரோ

    

கர்த்தர் செய்த உபகாரத்திற்கு                                   

என்ன பதில் நான் செய்திடுவேன்                          

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி                      

இரட்சகரை என்றும் தொழுதிடுவேன்