கரம் பற்றி நடந்திடுவேன்

Artists :
Album:
Categories:


கரம் பற்றி நடந்திடுவேன் / KARAM PIDITHU NADANDHIDUVEAN
 
கரம் பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
அவார் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
 
இராஜாதி இராஜாவுக்கே - மகிமை
இயேசு ராஜனுக்கே
இறங்கிடும் தேவ ஆவியே - என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே
 
1. சத்துரு கோட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்
 
2. நெருக்கங்கள் வரும்போது - என்
நேசர் என் பட்சம் உண்டு
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர்
நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
 
3. அற்புதம் நடந்திடுமே - என்றும்
மாறிடா தேவ அன்பால்
அல்லேலூயா பாடிடுவோம் - நம்
அதிசய தேவனுக்காய்