கர்த்தரையே துதிப்பேன்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


கர்த்தரையே துதிப்பேன்/Kartharaiyae Thuthipaen
 
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன்நான்
 
நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
 
எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிரித்து வென்றிடுவேன்
 
எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
 
கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை
அணுக முடியாது
 
வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்