Artists :
Album:
Praise Songs
Categories:
கசந்த மாரா மதுரமாகும் - kasandha-maara-mathuramaagum
கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாக வாழ்க்கை மாறும்
கண்ணீரோடே விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் - 2
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே நீ காண்பதில்லை
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை, தூங்கவில்லை
1. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போன்ற சத்துரு வந்தால்
ஆவியால் கொடி ஏற்றிடுவார் - இன்று
2. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை நிறுத்திடுவார் - இன்று
3. சோர்ந்து போன மகனே உனக்கு
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் - இன்று