கிறிஸ்து இயேசு நாமத்தாலே

Artists :
Album:
Categories:


கிறிஸ்து இயேசு நாமத்தாலே                             

வெற்றிக் கொடி ஏற்றுவோம்                                   

ராஜாதி ராஜாவாலே                                      

சத்துருவை வீழ்த்துவோம்

 

 

 

வானத்திலும் பூமியிலும் இயேசு நாமம் அல்லாமல்        

சத்துருவை வெற்றிக்கொள்ள வேறுநாமம் இல்லையே                                      - கிறிஸ்து இயேசு

 

பாதாளத்தின் கூரை ஒடித்த பரிசுத்த நாமமே               

வேதாளங்கள் நடுங்கிட வெற்றி பெற்ற நாமமே                                             - கிறிஸ்து இயேசு

 

மரணபயம் எனக்கு என்றும் இனி இல்லையே             

மரணத்தை ஜெயமாக விழுங்கினார் அல்லவோ                                             - கிறிஸ்து இயேசு

    

பாவமோ சாபமோ வியாதியோ செய்வினையோ                

மந்திர தந்திரங்கள் மேற்கொள்வதில்லையே                                                     - கிறிஸ்து இயேசு