கோடி கோடி துதிகள்
ஆடிப்பாடி துதிப்பேன்
துதிக்குப் பாத்திரரர் அன்பின் நேரே
அல்லேலூயா மகிமை
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
ராஜாதி ராஜாவாம் அவருக்கே
தூக்கினார் சேற்றினின்று
கழுவினார் இரத்தத்தினால்
மாற்றினார் கந்தலாடை
உடுத்தினார் நீதியாடை
காண்பேனே கண்குளிர
மார்பினில் சாய்ந்திருப்பேன்
மகிமைமேல் மகிமை பெற்று
மகிழ்வேனே என்றென்றுமே
நீங்கிற்றே பாவச் சுமை
நிரம்பிற்றே நேச அன்பு
நீசனை தள்ளாமலே
தேற்றினார் ஆவியாலே