நம்பி வந்தேன்

Artists :
Album:
Categories:


திரு பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தாமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

I
இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
II
மனம் மாற மாந்தர் நீர் அல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன்
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
 

III
என்னை கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே.