கூடுமே எல்லாம் கூடுமே

Artists : Fr. Berchmans
Album:
Categories:


கூடுமே எல்லாம் கூடுமே--Koodume Ellam Koodume
 
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
 
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
 
2. செங்கடல் உம்மைக் கண்டு
ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றதையா
 
3. மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
 
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா - உம்
பெயரால் கைகள் நீட்டினால்
நோய்கள் மறையுதையா
 
5. வனாந்தர பாதையிலே
ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை
நீரூற்றாய் மாற்றினீரே